மதுரையில் நீர்நிலையில் டன் கணக்கில் மருத்துவகழிவு பொதுமக்கள் அதிர்ச்சி
மதுரை

 

 

மதுரை மாவட்டம் வீரபாஞ்சான் கண்மாய் பகுதியானது 17ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் மற்றும் ப்ளாஸ்டிக் கழிவுகள் கொட்டபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அரசு நடவடிக்கை எடுக்க தாமதமான நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியோடு ஜேசிபி இயந்திரம் மூலமாக கழிவுகள் அகற்றம் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவகழிவு கொட்டப்பட்டது குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த மருத்துவ கழிவுகள் அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டதாக முதல் தகவல் கிடைத்துள்ளது. இந்த கண்மாய் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் தொற்றுநோய்கள் ஏற்படும் நிலை ஏற்படும் மக்கள் அச்சப்படுகின்றனர்

இது குறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமம் கோவிந்தம்மேடு பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
திருவண்ணாமலையில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களை அரசுத் துறையினர் பார்வையிட்டனர்
Image
ஆம்பூர் வனசரக பகுதிகளில் தீத்தடுப்பு பணிகளில் திறமையாக செயல்பட்ட வனத்துறையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி
Image
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
Image